குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல்; மொத்தம் 851 வேட்பாளர்கள் போட்டி…….

குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. குஜராத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த 93 தொகுதிகளுக்கான தேர்தல் களத்தில் 851 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 2 கோடியே 22 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மத்திய குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், வடக்கு குஜராத்தில் காங்கிரஸ் கட்சியும் வலுவான நிலையில் உள்ளதால் 2ம் கட்ட வாக்குப்பதிவு ஒட்டுமொத்த முடிவை நிர்ணயிப்பதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடைபெறமால் தடுக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *