கடந்த 24 மணி நேரத்தில் உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மிகக்குறைந்த அளவாக 6 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகி யுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 7.7, குன்னூரில் 9 டிகிரி, வால்பாறையில் 11,டிகிரி திருப்பத்தூரில் 15.2 டிகிரி, திருத்தணி, தருமபுரியில் 16.5,டிகிரியும் வேலூரில் 17.6 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *