ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்வு புதுச்சேரி அரசு அறிவுப்பு

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் எஸ்.டி.சுந்தரேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதிய பேருந்து கட்டணங்கள் நிர்ணயம் செய்து, புதுச்சேரி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் இயக்கப்படும் நிலை நிறுத்தப் பேருந்து கட்டணமானது புதுச்சேரி அரசின் ஆணைப்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து உரிமையாளர்கள் வாகன எரிபொருள், உதிரிப்பாகங்கள், டயர், வாகனக் காப்பீட்டுக் கட்டணம், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்றவை பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், அதன்படி புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை, டெல்லி பல்நோக்கு போக்குவரத்து குழுமத்தின் புதுச்சேரிக்கான வழிகாட்டு நெறியான விரிவான போக்குவரத்து திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி நிலை நிறுத்தப் பேருந்தகளுக்கான கட்டணத்தை மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குள் இயக்கப்படும் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5லிருந்து 7ஆக உயர்த்தியுள்ளது. மேலும் விரைவு பேருந்துகளில் கிலோமீட்ட்ருக்கு ரூ.0.50 காசுலிருந்து ரூ.0.90 காசாக உயர்த்தியும் விரைவு அல்லாத பேருந்துகளில் ரூ.5லிருந்து 8ஆக உயர்த்தியும் மாநில அரசு கட்டணம் நிரணயித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *