உலகம் முழுவதும் இன்று களைகட்டுகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்பு…

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை சாந்தோமில் உள்ள தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிகப்பட்டன. இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பைட்: 2

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி; விண்மீன் ஆலயத்தில் இன்று அதிகாலை 1 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை உற்சாகத்துடன் தொடங்கியது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வேளாங்கண்ணி சுற்று வட்டாரப் பகுதிகளில் குடில்கள் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு அப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

இதேபோல் மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்த்தவ மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சமூக நல்லிணகத்தைப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று கிறிஸ்த்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஓகி புயலால் உயிரிழந்த கிறிஸ்தவ மீனவ மக்களின் துயரத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் வகையில், இந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கிறிஸ்தவப் பெருவிழாக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *