இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி; பிற்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும் என தகவல்…

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 21 ம் தேதி வரலாறு காணாத பாதுகாப்புடன் நடைபெற்றது. இத்தேர்தலில், 77 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 258 மின்னணு இயந்திரங்கள் 19 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை பணிகளில் 100 பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி ஆர்.கே. நகரில் வெற்றி வாகை சூடி எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழையப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுற்று பிற்பகலுக்குள் முடிவு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது

* 77 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம்

* வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ராணிமேரி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன

* வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது

* 258 மின்னணு இயந்திரங்கள் 19 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன

* வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது

* வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

* ஆர்.கே. நகரில் வெற்றி வாகை சூடி எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழையப்போவது யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *