இத்தாலியில் புகழ்பெற்ற வெனிஸ் திருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

வெனிஸ் குடியரசின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வாக ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மிதவைகளில் விதவிதமான ஆலங்காரங்களில் தோன்றி அசத்திய நபர்கள், சாகச நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றினர். கயிற்றில் தொங்கியபடி, பெண் ஒருவர் நிகழ்த்திய ஜிம்னாஸ்டிக்ஸ் அனைவரையும் கவர்ந்தது. கயிற்றின் மேல் நடப்பது, சிங்கம், யானை என விலங்குகளின் உருவப் பொம்மைகளுடன் வலம் வருவது என ஆரவாரமாக வெனிஸ் திருவிழா தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *