அரசியலில் ஈடுபடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்தநாளையொட்டி, சென்னை தி.நகரில் மையம் விசில் என்ற நற்பணி மன்ற செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செயலியை அறிமுகப்படுத்தி பேசிய நடிகர் கமல், மக்கள் பிரச்னைகள் குறித்து அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உரிய அழுத்தத்தை கொடுப்பதற்காகவே இந்த செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக கூறினார். அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணியில் இறங்கியுள்ளதாக கூறிய கமல், அதற்காக கட்சியின் பெயரை தற்போது அறிவிக்க எந்த அவசரமும் இல்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *