அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டு இன்று காலை பத்து மணி நிலவரப்படி 73ரூபாய் 39காசுகளாக இருந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் வணிகநேர முடிவில் 72ரூபாய் 91காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 43காசுகள் சரிந்து 73ரூபாய் 34காசுகளாக இருந்தது.

காலை பத்துமணி நிலவரப்படி 47காசுகள் சரிந்து 73ரூபாய் 39காசுகளாக இருந்தது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மிகக் குறைந்த மதிப்பாகும். அதேபோல் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 73ரூபாயைத் தாண்டியுள்ளதும் இதுவே முதன்முறையாகும்.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும், இறக்குமதியாளர்களும் வங்கிகளும் அமெரிக்க டாலரை வாங்கிக் குவிப்பதுமே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *