இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் மனுபாக்கர்.

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் மனுபாக்கர்.

இளையோர் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் ஜெரிமி லால்ரினுங்கா தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

இந்தியா இதுவரை 2 தங்கம் 3 வெள்ளிப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *