-30 டிகிரி செல்சியஸ் கடுங்குளிரில் 250 பயணிகள் 16 மணி நேரமாக விமானத்துக்குள் பரிதவிப்பு

கனடாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் என்ற கடுங்குளிரில் 250 பயணிகள் விமானத்துக்குள்ளேயே 16 மணி நேரமாக நடுங்கிக் கிடந்தனர்.

நியூஜெர்ஸியின் நேவார்க் விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமையன்று 250 பயணிகளுடன் யுனைடட் விமானம் ஹாங்காங் நோக்கி புறப்பட்டது. ஆனால், பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவ அவசரம் காரணமாக விமானம், கனடாவின் நியூபவுண்ட்லேண்ட் அண்ட் லேப்ரடார்  மாகாணத்தில் உள்ள கூஸ் பே  விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த பயணியை இறக்கிவிட்டதும், அங்கு மைனஸ் 30 டிகிரி செல்சியசில் நிலவிய கடுங்குளிர் மற்றும் பனிபொழிவால் விமானத்தின் கதவு செயலிழந்தது.

மேலும் இரவு நேரத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளும் பணியில் இல்லாததால் இரவு முழுக்க கடுங்குளிரில் பயணிகள் 250 பேரும் விமானத்துக்குள்ளேயே அமரவைக்கப்பட்டனர். விமானப் பணிக்குழு வழங்கிய லேசான போர்வை கடுங்குளிரிலிருந்து காத்துக்கொள்ள உதவாததால் டிவிட்டரில் உதவிகோரி பலரும் முறையிட்டனர். உணவும் தீர்ந்துவிட்டதால் 10 மணி நேரம் கழித்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. 16 மணி நேர கடும் அவதிக்குப் பின் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *