மகாராஷ்டிரா மாநிலம், பல்காரில் நேற்று மாலையும் இரவும் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் அப்பகுதிமக்கள் அச்சம் அடைந்தனர். பல்கார் பகுதியில் நேற்று மாலை 6.40 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதே பகுதியில் நேற்றிரவு 8.59 மணியளவில் திடீரென மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியிருந்தது.
இதனால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.