ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பல் மருத்துவர், கத்தி குத்து காயங்களுடன் அவரது காரில் இருந்த சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரீத்தி ரெட்டி என்ற அந்தப் பெண், சிட்னியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மாயமானார். அன்று, ஆண் நண்பர் ஒருவருடன் அவர் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரீத்தி ரெட்டியை போலீசார் தேடி வந்த நிலையில் கிங்ஸ்போர்டு நகரில் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. காருக்குள் பார்த்த போது, சூட்கேசுக்குள் பிரீத்தி ரெட்டியின் சடலம் இருந்தது.
அவரது உடலில் பல கத்திக் குத்து காயங்கள் உள்ளன. பிரீத்தியின் முன்னாள் காதலர் ஒருவர் சாலை விபத்தில் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இதற்கும், பிரீத்தியின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.