மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் 3-0 என இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
லண்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. பி-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இத்தாலி அணியை நேற்று எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி கால் இறுதிக்கு தகுதிபெற்றது.
லால்ரேம்சியாமி, நேகா கோயல், வந்தனா கட்டாரியா ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.