சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஹாலெப், மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா உடன் பலப்பரீட்சை நடத்தினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிமோனா ஹாலெப், 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். மேலும், இதற்கு முன்பு ஷரபோவா உடன் 7 போட்டிகளில் விளையாடிய ஹாலெப் தோல்வியை தழுவியிருந்தார். இந்நிலையில், ஷரபோவாவிற்கு எதிரான ஆட்டத்தில் தற்போது முதல் முறையாக ஹாலெப் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *