ஜெருசலேம் விவகாரத்திற்காக ஐ.நா பாதுகாப்பு சபை அவசரமாக இன்று கூடுகிறது. இந்நிலையில் உறுப்பு நாடுகளுக்கு, அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹேலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜெருசலேம் விவகாரத்தில் தங்களுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளை அமெரிக்க உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஐ.நா பொதுச்சபையில் தங்களுக்கு எதிராக எந்த நாடு வாக்களித்தாலும், அதனைத் தனிப்பட்ட எதிர்ப்பாகவே பார்ப்போம் என்றும் ஹேலி எச்சரித்துள்ளார்.
2017-12-21