உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் கட் அவுட், பேனர் வைக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த கூடாது என தனி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவுக்கு எதிராக மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் செல்வசேகரன் மேல் முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்., இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் கட் அவுட், பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *