எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் முதல் கட்ட வெற்றி : ஆர்.பி.உதயகுமார்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாகவும், இதில் பின்னடைவு ஏதும் இல்லை என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது தவறு என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தேர்வு, மண் பரிசோதனை, மத்திய அரசு விதித்த 5 நிபந்தனைகளை நிறைவேற்றியது என முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாகவும், அடுத்த கட்ட வெற்றியையும் பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.