68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் சட்டசபைக்கு, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த ஒரு வார காலமாகவேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து தற்போது அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 68 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை டெல்லியில் உள்ள பாஜக தலைமைஅலுவலகம் வெளியிட்டது. தற்போது ஹமிர்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வரும் முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமால் இம்முறை சுஜன்புர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அம்மாநில பாஜக தலைவர் சத்பால்சிங், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்த அனில் சர்மா ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2017-10-19