அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆயுதப்போட்டி ஏற்படும் – அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

தங்களுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆயுதப்போட்டி ஏற்படும் என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா இடையே கடந்த 1987ம் ஆண்டு நடுத்தரத் தொலைவு அணு ஆயுத ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறி வருவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். டிரம்பின் முடிவு மீண்டும் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ள அவர், ரஷ்யாவுக்கு வரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *