தொழில்நுட்பச் சிக்கல்களால் ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் நிறுத்திவைப்பு

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற ஏ 320நியோ வகை விமானத்தில் எஞ்சினில் இருந்து எரிபொருள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது தரையிறக்கப்பட்டது. இதேபோல் நேற்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து அந்த விமானம் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதேபோல் டெல்லியில் இருந்து பெங்களூர் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் குறைபாடு இருந்தது தெரியவந்ததை அடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *