நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின், அதிநவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் இருந்தியா வருகையின்போது, இரு நாடுகளுக்கு இடையே 500 கோடி டாலர் மதிப்புடைய எஸ்-400 ஏவுகணை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்துப் பேசும் அவர், பிரதமருடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையின் போது கையெழுத்தாகிறது. சுமார் 500 கோடி டாலர் மதிப்புடைய – தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது.ரஷ்ய அதிபர் 4ம் தேதி இந்தியா வருவதை கிரெம்ளின் வெளியுறவுத்துறை செயலர் யூரி உஸாகோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-இந்தியா இடையிலான ஆயுத ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க வேண்டாம் என்று அமெரிக்கா, புதிய சட்டத்தின் மூலம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கினால், பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல இந்தியா உறுதியாக உள்ளது. பொருளாதாரத் தடை விதிக்காமல் விலக்கு அளிக்கும்படி அமெரிக்காவை கேட்டுக் கொள்ளவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு அமெரிக்கா உடன்படுமா என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *