திமுக கூட்டணியில் வி.சி. கட்சி இடம்பெறும் – திருமாவளவன்

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிச்சயம் இடம்பெறும் என்றும், டிடிவி.தினகரன் உடனான சந்திப்பு எதேச்சையானது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற சமூகப்பணி மாணவர்கள் கருத்தரங்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தோழமைக் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளாக மாறுவதில் எந்த பங்கமும் ஏற்படாது என்றும் கூறினார்.

தோழமை கட்சிகள் குறித்து தாம் ஏற்கெனவே கூறிய கருத்தைத் தான், துரைமுருகனும் சொன்னதாக கூறிய திருமாவளவன், மதிமுக கூட்டணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து மிகவும் எதார்த்தமானது என்றும் தெரிவித்தார். புயல் பாதிப்பை பார்க்கச் சென்ற போது டி.டி.வி தினகரனை எதேச்சையாக சந்தித்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *