சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 11 நாட்களாக பெட்ரோல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 42 காசுகள் குறைந்து 83 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசலும் 35 காசுகள் குறைந்து 78 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனையாகிறது.