இணையதளத்தில் அதிக செல்வாக்குள்ள நடிகை அனுஷ்கா சர்மா

இணையதளத்தில் செல்வாக்குடன் திகழும் நடிகைகளுக்கான பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி அனுஷ்கா சர்மா முதலிடம் பிடித்துள்ளார். ஃபேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாவது, உள்ளிட்ட பிரிவுகளை வைத்து நடிகைகளின் செல்வாக்கு தொடர்பாக குளோபல் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 71.90 மதிப்பெண்களுடன் அனுஷ்கா சர்மா முதல் இடம் பிடித்தார். பட்டியலில், பிரியங்கா சோப்ரா இரண்டாம் இடத்தையும், தீபிகா படுகோனே மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். சன்னி லியோன், சோனம் கபூர், ஷ்ரதா கபூர், வித்யா பாலன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *