பிரிட்டனில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவது குறித்து ஆலோசனை : 3வது நாளாக காட்விக் விமான நிலைய சேவை முடக்கம்

பிரிட்டனில் காட்விக் விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு காரணமான ஆளில்லா விமானத்தை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனால் 3வது நாளாக ஆயிரக்கணக்கான பயணிகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டதிற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்திலேயே தவித்து வருகின்றனர்.

பிரிட்டனின் 2வது மிகப்பெரிய விமான நிலையம் காட்விக். சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்திற்கு மேலே இரண்டு ஆளில்லா விமானங்கள் பறந்து சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதே போல தரையிறங்க வந்த விமானங்களும் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

இந்த சூழலில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பறந்து சென்ற ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.இதனால் 3வது நாளாக விமான சேவை நிறுத்தப்பட்டதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டதிற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா விமானங்கள் பறப்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. பயணிகளுக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த சிரமங்களை தவிர்க்க அருகில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.  விமானங்கள் தரை இறங்கும் போதும் அல்லது புறப்படும் போதும் ஆளில்லா விமானங்களால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஆளில்லா விமானங்களை இயக்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *