பால்கன் 9 ராக்கெட்டின் மறுபயன்பாடு குறித்த திட்டத்தைக் கைவிடுவதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு

பால்கன் 9 ராக்கெட்டின் உந்து விசைக்கான இரு பாகங்களையும் மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் கைவிட்டது.

உந்து விசைக்கான இரு எஞ்சின் பாகங்களைக் கொண்ட பால்கன் 9-ல், ஒன்று மட்டுமே மறுபயன்பாட்டுக்கானது. இந்த ராக்கெட்டில் இரு எஞ்சின்களையும் மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தும் வகையில் ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு இருந்தது. ஆனால் இந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலாக மனிதர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லும் Big Falcon ராக்கெட்டுகளுக்கான பணியை துரிதப்படுத்த உள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *