ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற உள்ள நிலையில் அதற்கான செயல்திட்டத்தின் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் பிரிட்டன் வெளியேற உள்ள நிலையில், அதற்கான செயல்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே அதை ஒத்திவைத்துள்ளார். பிரிட்டன் பிரதமருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் இடையே கடந்த மாதம் இந்த செயல் திட்டம் எட்டப்பட்டது.

ஆனால் இதில் சில அம்சங்கள் குறித்து பிரிட்டன் எம்.பி.க்களுக்கு கடும் அதிருப்தி உள்ள நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தால் தோல்வியடைந்திருக்கும். எனவே வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள தெரசா மே, மீண்டும் எப்போது செயல்திட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை.

வாக்கெடுப்பில் தோல்வி ஏற்படுவதை தெரசா மே தவிர்த்துவிட்டாலும், பிரெக்சிட் திட்டம் சீர்குலைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *