இறந்துபோன தனது முதலாளிக்காக 80 நாட்களாக காத்திருக்கும் நாய்: சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

சீனாவில் நாய் ஒன்று தனது இறந்துபோன உரிமையாளர் திரும்பி வருவார் என எண்ணி கண்ணீர் மல்க 80 நாட்களாக காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் பியர் வீடியோ இணையதளம், அந்த காட்சி பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நாயினுடைய உரிமையாளரான பெண்மனி, ஹோட் நகர சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி நேரிட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அப்போது அந்த இடத்தில் அவரது உடல் இருந்தபோது இந்த நாய், பாதுகாப்பாக நின்றிருந்தது. அன்றை தினம் முதல் தற்போது வரை நாள்தோறும் அந்த பகுதிக்கு வரும் நாய், தனது உரிமையாளர் உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையுடன் கடந்த 80 நாட்களாக காத்திருக்கிறது.

இதனைக் கண்டு நெகிழ்ந்து போகும் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள், நாய்க்கு உணவளித்து செல்கின்றனர். இது பற்றி அப்பகுதியில் டாக்ஸி ஓட்டும் டிரைவர் ஒருவர் கூறும்போது, “என்னைப் போன்ற டாக்ஸி டிரைவர்கள் அந்த நாய்க்குக் கொஞ்சம் உணவு கொடுப்பார்கள். அதைத் தூக்கிச் சென்று வளர்க்கலாம் என விரும்பி அருகே சென்றால் அது பயந்து ஓடும்.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 1920களில் தனது உரிமையாளர் இறந்த பின்னர் ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ரயில் நிலையத்திற்கு சென்ற ஹச்சிகோ என்ற நாய் ஜப்பானில் அதிக பிரபலம். ஹசிகோவிற்கு ஜப்பானில் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *