இத்தாலியில் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்

இத்தாலியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்கு போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் நோரல் வெற்றி பெற்றார். செர்வினியா என்ற இடத்தில் இந்தப் போட்டிகள் நடந்தன.

ஊன்றுகோல் இல்லாமல் செல்லும் இந்த பந்தயத்தில் இத்தாலியின் ஒமர் விஸின்டினை அவர் தோற்கடித்தார்.

பெண்களுக்கான பிரிவில் 2006ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அமெரிக்க வீராங்கனை லின்ட்ஸே முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். செக் குடியரசின் ஈவா சம்கோவா 2ம் இடத்தையும், இங்கிலாந்தின் சார்லட் 3ம் இடத்தையும் பிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *