30சதவீதம் அளவுக்கு திறன்களை அதிகரித்துக்கொள்ளும் வகையில் விரிவாக்கம் செய்ய இண்டிகோ ஏர்லைன் திட்டம்

இண்டிகோ விமான நிறுவனம், 30 சதவீதம் அளவுக்கு திறன்களை அதிகரித்துக்கொள்ளும் வகையில் விரிவாக்கத்திற்கு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விமானப் போக்குவரத்து சந்தை ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற உயர்வளர்ச்சியை சந்தித்து வருகிறது. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு, வரிகள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணம், கடும்போட்டி காரணமாக விமான போக்குவரத்து நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் சூழலும் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ளூர் விமானசேவை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ, 189 விமானங்கள், சந்தையில் 43 சதவீத பங்கு என முன்னணியில் உள்ளது. மேலும் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்களுடனான போட்டியில் தாக்குப் பிடிக்கும் வகையில் விரிவாக்கத்திற்கு திட்டமிட்டுள்ளது.

ஏர்பஸ் எஸ்இ ஏ320நியோஸ்  மற்றும் ஏடிஆர் 72டர்போபுராப்ஸ்  ரகங்களில் மாதத்திற்கு 6 என்ற எண்ணிக்கையில் விமானங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *