ஹைதராபாத்தை சேர்ந்த 8 வயது சிறுவன், ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலையில் ஏறி சாதனை

ஹைதராபாத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் சமன்யு பொத்துராஜு ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

தமது தாய் லாவண்யா, சகோதரி உள்பட 5 பேருடன் கடந்த 12 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலையான மவுண்ட் கொஸ்கியூஸ்கோவில் ஏறி சமன்யு சாதனை படைத்துள்ளார். இதுவரை 4 மலை சிகரங்களில் ஏறி இருப்பதாக குறிப்பிட்ட சமன்யு, அடுத்து 3776 மீட்டர் உயரமுள்ள ஜப்பானின் புஜி மலையில் ஏற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தாம் வளர்ந்த பின்னர் விமானப் படை அதிகாரியாக விரும்புவதாகவும் சமன்யு பொத்துராஜு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *