Artificial Intelligence என்றழைக்கப்படும் துறையில் இந்தியா முதல் 15 இடங்களில் இடம் பிடிப்பு

Artificial Intelligence என்றழைக்கப்படும் துறையில் இந்தியா முதல் 15 இடங்களில் இடம் பிடித்துள்ளது. கணினியை கட்டமைப்பது, கணினியால் உருவாக்கப்படும் ரோபோக்களை உருவாக்குவது, அல்லது மனித மூளை சிந்திப்பதைப் போல் மென்பொருள் ஒன்றை இயங்கச் செய்வது போன்ற அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகளை  ஆர்ட்டிபிசல் இன்டலிஜன்ஸ் என்று அழைப்பது வழக்கம். பின்லாந்து நாட்டின் ஏஐ வல்லுனர்கள் குழுவான zyfra  200 நாடுகளையும் 50 புகழ்பெற்ற அறிவியல் இதழ்களையும் வைத்து நடத்திய ஆய்வை அடுத்து சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் சீனாவும் உள்ளன. இந்தியா 15 வது இடத்தைப் பிடித்துள்ளது. அறிவியல் ஆய்வுகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடத்தப்படும் பல்வேறு கட்ட முயற்சிகள் குறித்தும் இந்த ஆய்வு விவரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *