வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னிடம் இருப்பதை விட மிகப்பெரிய அணு ஆயுத பட்டன் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் புத்தாண்டு உரையில் தமது மேஜை மீது அணு ஆயுத பட்டன் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் ஏவத் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தமது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், தானும் அணு ஆயுத பட்டனை வைத்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அது கிம் ஜோங் உன்னிடம் இருப்பதை விட மிகப் பெரியதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமாகும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *