மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது. அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி வாலாஜா சாலை வழியாக மெரீனாவை வந்தடைந்தது.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நேற்று அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மேலும், ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தமது பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *