பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து சோனியாகாந்தி பரிசீலினை செய்ய வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை….

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸின் கடிதத்தை ஏற்று பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து சோனியாகாந்தி பரிசீலினை செய்ய வேண்டும் என எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், இராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி பிரியங்காகாந்தி ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென தமது கடித்தத்தில் கே.டி.தாமஸ் குறிப்பிட்டுள்ளார் என்று கூறிய எழுச்சி தமிழர், கே.டி.தாமஸின் வேண்டுகோளை ஏற்று சோனியாகாந்தி அம்மையார் கருணைகாட்ட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துவதாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை சதித்திட்டம் தீட்டியவர்கள், செயல்படுத்தியவர்கள், அதில் பயன்படுத்தப்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்ததாகவும் பேரறிவாளன் உள்ளிட்டோர் அதில் மூன்றாவது பிரிவைச்சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள நீதிபதி கே.டி.தாமஸ், மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அவர் கூறியதையும் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மகாத்மாகாந்தி கொலை வழக்கில் கொலையாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றபட்ட போதும் அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதைத் தனது கடிதத்தில் கே.டி.தாமஸ் எடுத்துக்காட்டியுள்ளதகாவும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்டோர் 26 ஆண்டுகளாக சிறையில் இருப்பதையும் அவர்களுக்குத் தண்டனை குறைப்புச் செய்யலாம் என தமிழக அரசு பரிந்துரைத்த போது மத்திய அரசு அதற்கு உடன்படாததையும் சோனியாகாந்தி சுட்டிக்காட்ட வேண்டும் என்ற கே.டி.தாமஸின் வேண்டுகோளை ஏற்று பெருந்தன்மையோடு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் அவர்கள் விடுதலையாவதற்கு வழி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நீதிபதி கே.டி.தாமஸின் கருத்துக்கு தாம் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வழிமொழிவதாகவும் தெரிவித்தார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த மூன்று பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்குத் தலைமை வகித்து தீர்ப்பளித்த நீதிபதி கே.டி.தாமஸ் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யலாம் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து நீதிபதி கே.டி.தாமஸின் வேண்டுகோளை ஏற்று பெருந்தன்மை மற்றும் கருணையின் அடிப்படையில் என்றும் நிலைத்திருக்கும் முன்னுதாரணம் ஏற்படுத்து வகையில் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென சோனியாகாந்தி அம்மையாரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *