பெரு நாட்டின் தலைநகர் லீமா அருகே சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது.

லீமா நகருக்கு வடக்கு திசையில் சுமார் 70 கி.மி. தொலைவில் பசமாயோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு செல்லும் சாலைகள் மிகவும் ஆபத்தானவையாகும். கடந்த செவ்வாய்க்கிழமை பசமாயோ நகரில் இருந்து ஒரு பேருந்து 57 பயணிகளுடன் லீமா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஒரு ஆபத்தான வளைவில் எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அந்த பேருந்து சாலையை ஒட்டி இருந்த சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கப்போராடினர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் 36 பேர் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் பல உடல்கள் பள்ளங்களில் இருந்து எடுக்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *