இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று மாலை 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பது குறிப்பிட்த்தக்கது. இதனால் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *