பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரது நோக்கம்… தமது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தல்

அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது நம் அனைவரது நோக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

துாத்துக்குடி நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த், அவரது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பேசிய ரஜினி, பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது நம்முடைய அனைவரது நோக்கமாக உள்ளது என்று தெரிவித்தார். நாம், ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்டுப்பாட்டுடன் இருந்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று கூறிய அவர், அரசியல் என்பது பொதுநலம் என்றும், மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *