பள்ளிபாளையம் அருகே 30 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் ; நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….

கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள வனவாசியில், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, 840 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வனவாசியில் அமையவுள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் பி.எட். கல்லூரிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சேலத்தில் புதிதாக இரண்டு வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்தினையும் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை வழங்கிய முதலமைச்சர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில்தான் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை உடனுக்குடன் செய்து கொடுக்கும் அரசாக உள்ளது என்றார்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 30 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிபாளையம் -ஈரோட்டை இணைக்கும் வகையில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. 430 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலத்தில் 16 தூண்களுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *