நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை காலை ராமேஸ்வரத்திலிருந்து 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் சென்றனர்.

இந்நிலையில் கிறிஸ்து என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணிக்காக அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

அவர்களிடம் அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பின் மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *