நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி தொடரில் இந்தியாவை 2க்கு 0 என்ற கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது.

இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நியூசிலாந்தின் தவுரங்கா நகரில் நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது. இதில் 6 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இந்திய அணி 2-வது போட்டியில் பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. முதல் காலிறுதி நேரத்தில் பெல்ஜியம் முதல் கோலை பதிவு செய்தது. பின்னர் 4-வது காலிறுதியில் பெல்ஜியம் அணி 2வது கோலை அடித்தது. ஆனால் இந்திய அணி கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. இதன் மூலம் இந்திய அணியை 2க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் பெல்ஜியம் வெற்றி பெற்றது. இதனையடுத்து நாளை இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *