ஜப்பான் தமது 3ம் தலைமுறை செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது.

ஜப்பானின் உச்சினோரா விண்வெளி மையத்தில் இருந்து EPSILION 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த அதிநவீன ராக்கெட் 24 மீட்டர் நீளம் கொண்டது. இந்த EPSILION 3 ராக்கெட் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை கொண்டுள்ளது. இதனால் ஜப்பான் நாட்டின் பாதுகாப்பிற்கான ஆய்வுக்கு இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த செயற்கைக் கோளின் உதவியுடன் விண்வெளி பற்றிய பல அறிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *