காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முகாந்திரம் எதுவும் தெரியவில்லை – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர்கள் மற்றும் அமைப்பு செயலார்கள், செய்தி தொடர்பாளர்கள், தலமை நிலையச் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்குபெற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர தொல். திருமாவளவன், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தராக ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி அவர்களை நியமனம் செய்திருப்பது கண்டனத்திற்குறியது, அதனை உடனே திரும்ப பெற வேண்டும். அதேபோல் உயர்நீதிமன்றமும், சட்ட கல்லூரியும் ஒரே இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முகாந்திரம் எதுவும் இதுவரை தெரியவில்லை, அரசியல் அழுத்தம் கொடுக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள். எனவே தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய முன்வர வேண்டும். காவிரி விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்வதை தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ராம ராஜ்ய ரத யாத்திரை வெகு ஜன மக்களுக்கு எதிரானது, தமிழகம் அமைதி நிலமாக இருப்பதை விரும்பாதவர்கள் இந்த ரத யாத்திரையை அரசியல் யாத்திரையாக நடத்துகிறார்கள்.
புதுச்சேரி நியமன எம்எல்ஏ விவகாரத்தில் புதுவை அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தொல் திருமாவளவன் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *