தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை வரும் 26ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்றும், அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய வானிலை நிலவரப்படி, அடுத்த 2 நாட்களில் தென்னிந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவக் காற்று விலகி, அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரிய அளவில் மழை இருக்காது என்றும் வரும் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *