ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு ஜெயலலிதாவின் அண்ணான் மகள் தீபா ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் இதுவரை தி.மு.க. மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா, பொறுப்பு டீன் நாராயணபாபு, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, உதவி பேராசிரியர் முத்துச்செல்வன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து ஜெ.தீபாவின் கணவர் மாதவன் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை நீதிபதி முன்பு எடுத்து கூறினார். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வருகிற 13ஆம் தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *