சீனாவில் எழில்கொஞ்சும் ஏரிப்பகுதி ஒன்று சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

சாங்கிங் நகரில் உள்ள ஹேன்ஃபெங் ஏரி 15 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இதன் கரைகளில் இருக்கும் மரங்களும், செடிகொடிகளும் பல வகையான வண்ணங்களில் காட்சியளிக்கின்றன. பல்வேறு இன பறவைகளும் அடைக்கலம் புகுந்திருப்பதால், ஏரியின் அழகு பல மடங்கு அதிகரித்துள்ளது. மனதை கொள்ளை கொள்ளும் வண்ணமயமான இந்தக் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுதவிர, ஏரியின் அருகே உள்ள காட்டில், மூங்கில் தண்டுகளை தோண்டி உண்பதும் சுற்றுலாப்பயணிகளுக்கு பொழுதுபோக்காகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *