சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்தது யுனெஸ்கோ ; சென்னை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து….

யுனெஸ்கோவின் சிறந்த பாரம்பரிய இசை பங்களிப்பு நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோ நிறுவனம், பாரம்பரிய கோயில்கள், பாரம்பரிய இசை, பாரம்பரிய நடனம் ஆகியவற்றை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. இதனடிப்படையில், பாரம்பரிய இசை பங்களிப்பு செய்த நகரங்கள் பட்டியலில் சென்னையையும் சேர்த்துள்ளது. இது தொடர்பான தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சென்னை மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இந்திய கலாச்சாரத்துக்கு சென்னையின் பங்களிப்பு விலைமதிக்க முடியாதது என கூறியுள்ள பிரதமர் மோடி, இந்தியாவுக்கு இது பெருமை வாய்ந்த தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், யுனெஸ்கோ அறிவித்துள்ள பட்டியலில், சென்னை நகரம் இடம் பிடித்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *