சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் ஆல்-ரவுண்டராக அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர் சமீபத்தில் நடைபெற்ற கூச் பெஹார் தொடரில் மும்பை அணிக்காக களம் இறங்கி அசத்தினார். இதனை தொடர்ந்து இந்திய கிளப் அணிக்கும் ஹாங்காங் கிளப் அணிக்கும் இடையே ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய கிளப் அணிக்காக களம் இறங்கிய அர்ஜூன் தெண்டுல்கர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆல்ரவுண்டராக அசத்தியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *