குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு; வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ….

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது. இதனையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நடைபெற்றத் தேர்தலில் 66.75% வாக்குகள் பதிவாகின. டிசம்பர் 14ஆம் தேதி 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 69.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. 182 தொகுதிகளிலும் மொத்தம் 68.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களிலும் பதிவான வாக்குகளை எண்ண 33 மாவட்டங்களில் 37 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலத் தேர்தல்களும், 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Card: யாருக்கு வெற்றி?

* குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்

* டிசம்பர் 9ம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நடைபெற்றத் தேர்தலில் 66.75% வாக்குகள் பதிவு

* டிசம்பர் 14ம் தேதி 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 69.99% வாக்குகள் பதிவு

* 182 தொகுதிகளிலும் மொத்தம் 68.41% வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம்

* 33 மாவட்டங்களில் 37 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *