எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; கீ.வீரமணி, முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எச்சரிக்கை…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி ரூபாய் என்று அறிவித்த இந்து மக்கள் முன்னேற்றகழக தலைவர் கோபிநாத்தின் வன்முறை பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் உரையாற்றிய போது வரலாற்று சான்றுகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். அவரது உரையின் முன் பகுதியையும் பின்பகுதியையும் வெட்டிவிட்டு இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என கூறியதாகவும் மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவும் தமிழ் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதற்கான விளக்கத்தை எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் ஊடகங்களுக்கு அளித்துள்ளார். இந்நிலையில் விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்து மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கோபிநாத் என்பவர் தொல்.திருமாவளவன் தலைக்கு ஒருகோடி ரூபாய் என்று அறிவிப்பு செய்து இருந்தார். அவரது இந்த வன்முறை தூண்டும் பாசிச கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் .

ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சி

ஜமீலா முன்னாள் பாஜக மகளிரணி

நடிகை கஸ்தூரி

தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி

இந்து மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வன்செயல் அறிவிப்புக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். மிரட்டல், உருட்டல் கண்டு அஞ்சக் கூடியவர் அல்லர் மானமிகு திருமாவளவன் என்றும், அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புலி வாலை மிதிக்க வேண்டாம்” என்ற சொலவடை உண்டு; என்றும் அதற்குப் பதிலாக ‘‘சிறுத்தைகளின் வாலை மிதிக்க ஆசைப்படாதீர்’’என்று எச்சரிப்ப தாகவும் கி.வீரிமணி தெரிவித்துள்ளார். இதனிடையே எழுச்சிதமிழருக்கு எதிராக அறிவிப்பு வெளியிட்ட இந்து மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *